நலமும் நலம் சார்ந்த இடமுமாக
நகல் எடுக்கும் இயந்திரம் போல் அமைந்துவிட்ட நாளும் ஒரே மாதிரியான வாழ்வில், மனம் தேடும் மாற்றத்தை நோக்கிய எங்களது பயணத்தில் ‘நல்லன மட்டும் சூழ்க’ என்ற நோக்கத்தில், நாங்கள் விதைத்துள்ள முதல் விதை “மகிழ் நிலம்”.
நம் உடம்பிற்கு வெளியே பயன்படுத்தும் ஒவ்வொன்றையும் (உடை, ஒப்பனை) அலைந்து, தேடிப்பார்த்து வாங்கி பயன்படுத்தும் நாம், உடம்பிற்கு உள்ளே சென்று நாளடைவில் நம் உடலாகவே மாறும் உணவைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. எனவே, நல்லுணவிற்காகவும், நல்லுணர்விக்காகவும், இயற்கை ஆர்வலர்களையும், இயற்கை வேளாண்மை விவசாயிகளையும் ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை விளைபொருள்களை மதிப்பு கூட்டி நுகர்வோர் பொருட்களாக தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நஞ்சில்லா இயற்கை விளைபொருட்களை மட்டுமே விற்பனை செய்து உங்களின் ‘நலமும் நலம் சார்ந்த இடமுமாக’ இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
செயல்முறை
கொள்முதல்
சமூக பொறுப்புள்ள உள்ளூர் இயற்கை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, அவர்களை இயற்கை விவசாயத்திற்கு ஊக்குவிப்பது.
விலை நிர்ணயம்
விளைபொருட்களின் அடிப்படை விலையை அதை விளைவித்த உற்பத்தியாளர்களால் மட்டுமே நிர்ணயம் செய்வது.
சமூக பொறுப்பு
நாங்கள் சமூக பொறுப்புள்ள இயற்கை விவசாயிகளுக்காக பணியாற்றுகிறோம். ‘ஆர்கானிக் லேபிளிடப்பட்ட’ வணிக நபர்கள், பொருளீட்டும் நோக்கத்தில் வணிகம் செய்பவர் அல்லது விற்பனை பிரதிநிதிகளுக்காக அல்ல.
பருவகால தயாரிப்புகள்
பருவகால தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்வது. எவற்றை எப்போது கொடுக்க வேண்டும் என்று இயற்கை அறியும். எனவே, நாங்கள் ஒருபோதும் தயாரிப்புகளைத் துரத்துவதில்லை, அதை எப்போதும் கிடைக்கச் செய்வதில்லை.
நம்பகமான உழவர்கள்
‘ஆர்கானிக்’ என்று பெயரிடப்பட்ட இன்னபிற பிராண்டுகளை ஒருபோதும் விற்பதில்லை. பொருட்களை உற்பத்தி செய்தவர் விபரம், உற்பத்தி முறை, உழவு முதல் விற்பனை வரையான செயல்முறையை அறியாமல் அவர்கள் பொருட்களை விற்பதில்லை.